நாம் தவிர்க்கும் காய்கறி மற்றும் பழங்களில் இத்தனை மருத்துவக் குணங்களா? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

Life Food Sea Foods Banana Fruit
By Vasanth Jan 08, 2021 07:23 AM GMT
Report

ஆதி காலம் முதல் இப்போது வரை தமிழர்கள் காய்கறி வகைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுத்து வருகின்றனர். மாமிச உணவு வகைகளை அதிகம் உண்பதை விட, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் நமக்கு ஏற்படுவதில்லை என்பதை அப்போதே நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களை சற்று மறந்தே தான் போய் விட்டோம். விலை அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களை விட, நாம் அலட்சியமாக நினைக்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய சில காய்கறி வகைகள் நமக்கு தீவிரமான பல நோய்களை கட்டுபடுத்துகிறது.

அப்படியான காய்கறி வகைகளையும், அது செய்யும் வேலையை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். பச்சை மிளகாய் பச்சைமிளகாய் சூடு என்பதால் பெரும்பாலும் காய்ந்த மிளகாயை பயன்படுத்துகிறோம். பச்சை மிளகாய் பருக்களை குறைத்து சருமம் சார்ந்த பிரச்சனைகளை நீக்குகிறது.

எனவே இதை தேவையான அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் நன்மை உண்டு. கருவேப்பிலை சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைத்து விடுவதால் பலருக்கும் கறிவேப்பிலையின் சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. நீங்கள் சமைக்கும் பொழுது சமையலில் மிக்ஸியில் அரைக்கும் பொருட்களுடன் சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து அரைத்து விட்டால் போதும். அந்த உணவும் ருசிக்கும், கல்லீரல் மற்றும் கண் சார்ந்த நோய்களையும் தடுக்கும்.

முடி உதிர்வதும் விரைவாக குறையும். எலுமிச்சை பழம் எலுமிச்சை பழத்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானத்திற்கும் நல்லது. பல் சார்ந்த நோய்களும் ஏற்படாமல் தடுக்கப்படும். ஆரஞ்சு ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் போன்ற கொடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். பாகற்காய், கொத்தவரை பாகற்காய் மற்றும் கொத்தவரங்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் அற்புதமான காய்கறி வகைகளாகும். இதனை வாரம் ஒரு முறையாவது கட்டாயம் சமைக்க பழகிக் கொள்ளுங்கள். இதனால் கிடைக்கப்போகும் நன்மைகளை வயதாகும் பொழுது நீங்கள் உணரலாம்.

இஞ்சி தினமும் குடிக்கும் தேநீரில் இஞ்சியை தட்டி போட்டு குடிப்பது, உணவில் இஞ்சி அதிகம் சேர்ப்பதும் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். வாழைக்காய் வாழைக்காய் மற்றும் வாழைப்பூ வயிற்றில் சிறுநீரக கல் உருவாகுவதை தடுக்கிறது. இப்போது இந்த பிரச்சனை நிறைய பேருக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், சிறு கற்கள் கூட சிறுநீருடன் வெளியேறிவிடும். மேலும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது.

அவரைக்காய் சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி அவரைக்காயை சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து நல்ல நிவாரணம் காண்பீர்கள். கத்திரிக்காய் கத்திரிக்காய் அரிப்பை ஏற்படுத்தும் என்று பயந்து இதனை தவிர்க்கின்றனர். ஆனால் அனைவரையும் அச்சுறுத்தும் கேன்சர் நோய் அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிடுபவர்களுக்கு வருவதில்லையாம். மாதுளை இரத்த சோகை மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு அடிக்கடி மாதுளை பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது.

கருத்தரித்திருக்கும் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். முருங்கைக்காய் முருங்கைக்காய் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கி ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டுள்ளது. எளிதாகக் கிடைக்கும் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நம் ஆயுளை கூட்டக் கூடியது. உருளைக்கிழங்கு வாய்வு என்று ஒதுக்கி வைக்கப்படும் உருளைக்கிழங்கில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.

இதனை சமைக்கும் பொழுது பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத் தொல்லை ஏற்படாது. வெண்டைக்காய் உடல் எடையை சீராக வைப்பதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. உடல்பருமன் இருப்பவர்கள் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். பீர்க்கங்காய் பீர்க்கங்காய் இளமையில் வரும் கண் பார்வை குறைபாட்டை எளிதாக சரி செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி பீர்க்கங்காய் சமைத்துக் கொடுப்பது நல்லது.

புடலங்காய், சுண்டைக்காய் புடலங்காய் மற்றும் சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் மிகவும் நல்லது. சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் சொல்லில் அடங்காதவை. எத்தகைய கொடிய நோய் தொற்றும் ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி சின்ன வெங்காயத்தை உணவில் தாராளமாக சேர்த்து வர வேண்டும்.

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் மிகுதியான ஆரோக்கியத்தை தரக்கூடியது. தக்காளி தக்காளி இல்லாமல் உணவே இல்லை என்று கூறலாம். தமிழருடைய சமையலில் தக்காளிக்கு தான் முதலிடம் உள்ளது. தக்காளியை விதைகள் நீக்கி சமைப்பது நன்மையாகும். மேலும் தக்காளியை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் கேன்சர் செல்கள் உருவாகும் முன்பே அழிந்துவிடுகிறது.

அன்னாச்சி உஷ்ணம் என்று ஒதுக்கி வைக்கும் அன்னாசியில் காய்ச்சலை குறைக்கும் தன்மை உள்ளது. காய்ச்சல் இருக்கும் பொழுது அன்னாசிப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம். நாவல் பழம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று முருகன் அவ்வையாரிடம் விளையாடிய நாவல்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

வாழைப்பழம் தினசரி உணவில் வாழைப்பழம் இடம்பெறுவதால் சரும வெடிப்புகளை தடுக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும். நெல்லிக்காய் நெல்லிக்காய் பெரியது மற்றும் சிறியது எதுவாக இருந்தாலும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் சளி தொந்தரவு என்பதே வராது. உடல் சூட்டினால் வரும் வாய் புண் உடனே நீக்குவதற்கு நெல்லிக்காய் சாப்பிடலாம். கருணைக்கிழங்கு நாக்கு அரிக்கும் என்பதால் கருணைக் கிழங்கை உணவில் தவிர்த்து வருகிறோம்.

ஆனால் கருணைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பப்பாளி: பப்பாளி பழத்தில் கண் சார்ந்த நோய்களை தடுக்கும் ஆற்றலும் தோலில் இருக்கும் வெண்மை நோய் நீங்கவும் உதவும் தன்மை உள்ளது. முளைக்கீரை கீரை வகைகளில் முளைக்கீரை பசியை தூண்டி கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

கண்களில் ஏற்படும் உஷ்ணத்திற்கு, முளைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை கிடைக்கும். சுரைக்காய் உடல் உஷ்ணத்தை வெகுவாக குறைத்து உடலை எளிதாக குளிர்ச்சியடைய வைக்கும் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

பூசணிக்காய் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி பூசணிக்காய் சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம். வெள்ளரிக்காய் தண்ணீர் அருந்துவதற்கு சோம்பல் தனம் படுபவர்கள் நீர்க்கடுப்பு நோயை அனுபவிப்பார்கள்.

அந்த நீர்கடுப்பு நோயிலிருந்து நிவாரணம் பெற தண்ணீர் குடிக்காவிட்டாலும், அடிக்கடி நீர்சத்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிட்டு வாருங்கள். நிலக்கடலை உடலில் சக்தி இல்லாதது போல் உணர்ந்தால் உடனே நிலக்கடலையை சாப்பிட்டுப் பாருங்கள். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

மேலும் நிலக்கடலை தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.

கொய்யாப்பழம் கொய்யா பழம் கண் பார்வை தொடர்பான விஷயங்களில் இருந்து நம்மை காக்கிறது. முட்டைகோஸ் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் முட்டைகோஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்திற்கும் சிறந்த தேர்வாக விளங்குகிறது. 

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000