கடலுக்குள் பாய்ந்த வாகனம் - சாரதிக்கு ஏற்பட்ட நிலை
By Sumithiran
மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியில் பயணித்த வாகனம் இன்று (டிசம்பர் 18) மதியம் வெல்லமடம பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்ததில் சாரதி காயமடைந்துள்ளதாக மாத்தறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டு உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம்
இவர் தெவிநுவரவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த நிலையில் வாகனம் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும், அப்பகுதி மக்கள் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.



திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்