இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்து வெளியட்டுள்ளார்.
அதன்படி, நாட்டிற்கான வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வாகன இறக்குமதி
எனினும், அரசாங்கம் எதிர்பார்த்த அளவிற்கு வாகன இறக்குமதியில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில வாகன இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பி, நுகர்வோரை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |