போலி வாகன இலக்கத்தடு தயாரிப்பதற்கு 3000 ரூபா - கையும் களவுமாக சிக்கிய இளைஞன்
Sri Lanka Police
Sri Lanka
By pavan
பாணந்துறை பகுதியில் போலி இலக்கத்தகடுகள் தயாரித்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநர் கைது செய்யபட்டர்.
அக்குரஸ்ஸ வெலிதூவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவரை காவல்துறையினர் பாணந்துறையில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான போலி இலக்கத்தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி - 3000 ரூபா

போலி இலக்கத்தகடுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றின் இரண்டு பக்கங்களுக்குமான போலி இலக்கத்தடு தயாரிப்பதற்கு 3000 ரூபா அறவீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 2 மணி நேரம் முன்
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்…
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி