சர்ச்சைக்குரிய இணையவழி விசா மோசடி : பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு நீதிமன்றம் அழைப்பாணை
வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இணையவழி விசா வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் மற்றும் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
குறித்த மனுவை பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka ) மற்றும் எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthran) ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.
வெளிநாட்டு நிறுவனம்
இதனடிப்படையில், இந்த மனுவில் பிரதிவாதிகளுக்கு ஒகஸ்ட் இரண்டாம் திகதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதுடன் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு நிறுவனத்திற்கு இணையவழி விசா வழங்குவதில் நேரடியாக தலையிட்ட அமைச்சர்களுக்கு தனித்தனியாக அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஏனைய அமைச்சர்கள் சார்பில் அமைச்சரவை செயலாளருக்கு அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |