வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய அறிவிப்பு

Sri Lankan Tamils Jaffna
By Theepan May 26, 2026 12:03 AM GMT
Report

யாழ். சிறைச்சாலையில் நேற்றையதினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சடலத்தை மனைவியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளை , தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த மனைவி , இறுதி சடங்கினை அரச செலவில் செய்யுமாறு கோரி சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்.

வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

அதனை அடுத்து அரச செலவில் இறுதி சடங்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் , சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கு

வித்தியா கொலை வழக்கினுடைய மரண தண்டனை கைதியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட போது அங்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய அறிவிப்பு | Vidya Mu Rder Convict S Last Rites

சிறைச்சாலை அதிகாரிகளின் உத்தரவுப்படி அங்கிருந்த சில காவல்துறை உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டனர். வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்றையதினம் சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனால் இன்று காலை முதலே யாழ்ப்பாணம் சிறைச்சாலை முன்பாக அதிகளவான ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகி இருந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுப்பதை தடுக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் சிறைச்சாலை உட்பகுதியில் கதவுகளை மூடி சடலத்தின் உடற்கூறு பரிசோதனைக்காக சிறைச்சாலை பேருந்தில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கும் ஊடகவியலாளர்கள் காத்திருக்கவே சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் ஊடாக ஊடகவியலாளர்களை வெளியேற்றுமாறு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து அங்கு வந்த சில காவல்துறை உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்ததுடன் வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறுமாறும் காணொளி எடுக்க முடியாது எனவும் முரண்பட்டனர்.

இதன்போது வைத்தியசாலை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க எந்த தடையும் இல்லை என தெரிவித்திருந்தார்.


அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026