கரூர் பேரவலம்! கால்களால் மிதித்து கொன்ற கும்பல் : மருத்துவமனையில் கசிந்த குரல் பதிவு
தமிழகத்தின் கரூர் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனையில் இருந்து ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது.
அந்த குரல் பதிவில், மின்னிணைப்பை துண்டித்து விட்டு கழுத்தை நெரித்தும், வயிற்றில் மிதித்தும், கால்களால் மிதித்தும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் வாக்குக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்புலன்ஸ் வண்டியில் கட்சிக் கொடியை கட்டி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரின் உடற்கூற்று பரிசோதனைகளை ஒரே நாளில் இரவோடு இரவாக செய்ததற்கான காரணம் என்னவென்று த.வெ.க தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட குண்டர்கள் அங்கே ஆயுதங்களுடன் இருந்ததாகவும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்த மேலும் பல விடயங்களை பற்றிப் பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
