போராட்டம் திரைப்படத்தின் வீர தமிழன் பாடல் வெளியீடு
ராஜ் சிவராஜின் இயக்கத்தில் பாஸ்கரன் றீகனின் நடிப்பில் வெளியாகியகவுள்ள போராட்டம் திரைப்படத்தின் முதல் பாடல் (1st Single) வெளியிடப்பட்டுள்ளது.
உமாகரன் இராசையாவின் வரிகளால் உருவான குறித்த பாடலை புவன் மதீசன் இசையமைத்துள்ள நிலையில் ஈழப்பாடகர் வாகீசன் மற்றும் தென்னிந்திய பாடகர் சத்தியன் ஆகியோர் பாடியுள்ளனர்.
இதன்படி இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் குறித்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக பாஸ்கரன் றீகன் நடித்துள்ள நிலையில் ஐ.பி.சி தமிழ், பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) தயாரிப்பில் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.
இசை மற்றும் வரிகளின் மூலம் படத்தின் உணர்வையும் போராட்டத்தின் வலிமையையும் வெளிப்படுத்தும் இந்த முதல் பாடல், திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்பது படக்குழுவின் நம்பிக்கை
மேலும் குறித்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூரியாவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |