சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விராட் கோலி - ஷாருக்கான் நடனம்!
இந்தியன் ப்ரீமியர் லீக் ஆட்டங்கள் மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெறுவதுடன், ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றை கண்டுகளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதி இருந்ததுடன், குறித்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோலி - ஷாருக்கான் நடனம்
இந்தப் போட்டியை நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் மற்றும் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று கண்டு களித்தனர்.
போட்டி நிறைவடைந்த பின்னர், மைதானத்திற்குள் நுழைந்த ஷாருக்கான் கொல்கத்தா அணி வீரர்களை சந்தித்து பேசி, தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
பின்னர், நேரில் சந்தித்துக் கொண்ட நடிகர் ஷாருக்கான் மற்றும் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடியுள்ளனர்.
குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
