ஊடகவியலாளர்களை புறக்கணித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
murder
journalist
batticalo
viyalenthiran
By Kalaimathy
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட வேளை அதனை தவிர்த்து சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அந்த சம்பவம் தொடர்பில் முன்னுக்குப்பின் முரணான பல கருத்துக்களை தெரிவித்திருந்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன். இந்நிலையில், உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்று அவரிடம் கேள்வியெழுப்புவதற்காக ஊடகவியலாளர்கள் முற்பட்டவேளை அவர் அதனை அவர் தவிர்த்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் அல்லது அதனை தவிர்த்து சென்றது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி