நோபல் பரிசு வேண்டுமா ..! முதலில் இதைச் செய்யுங்கள் : ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட சவால்
நோபல் பரிசு கிடைக்கவேண்டுமெனில் காசாவில் நடைபெறும் போரை முதலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
“காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு மட்டுமே உள்ளது. இந்த மோதலில் ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மட்டுமே எனTம் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா தான் ஆயுதங்களை வழங்குகிறது
அவர் எங்களை விட இப்போரை நிறுத்த அதிகமாக செய்ய முடிவதற்கான காரணம் என்னவென்றால், காசாவில் போரை நடத்துவதற்கான ஆயுதங்களை நாங்கள் வழங்குவதில்லை, அமெரிக்காதான் வழங்குகிறது.” எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐநா பொதுசபையில் நேற்று(24) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசுகையில், ‘எனக்கு அமைதி வேண்டும். ஏழு மோதல்களை நிறுத்தினேன்’ என மீண்டும் கருத்து வெளியிட்டார்.
காசா போரை நிறுத்தினால் நோபல் பரிசு சாத்தியமாகும்
இந்நிலையிலேயே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்றால், காசாவில் நடக்கும் போரை நிறுத்தினால் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசு சாத்தியமாகும்” என்று மக்ரோன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
