மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம்
தற்போது உலகெங்கும் பேசுபொருளாகியுள்ள ப்ளைதுபாய் துணை விமானி, விமானத்தை மோத செய்ய விரும்பியதாகவும், மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் சவுதி அரேபியாவில் உள்ள அதிகாரிகளிடம் கூறியதாக, அவருடனான விசாரணை குறித்து சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்ட 29 வயதான ஓமன் நாட்டவரான ஹமாம் அல்-ஹம்மாமி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பயங்கரவாத செயலை செய்ய முயன்ற துணை விமானி
துணை விமானி ஒரு பயங்கரவாத செயலை செய்ய முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஹம்மாமிக்கு வேறேதும் சக்திகளுடன் தொடர்பு இருந்ததா என்பது உட்பட, இந்த சம்பவம் குறித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் விசாரித்து வருகின்றன.
பலமுறை கோடரி தாக்குதல்
விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயற்சிப்பதற்கு முன்பு, விமானத்தில் இருந்த கோடரியால் கப்டனை ஹம்மாமி பலமுறை வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இறுதியில் கப்டன் காக்பிட் கதவை திறந்ததால், பயணிகளும் ஊழியர்களும் தலையிட முடிந்தது. தாக்குதல் நடந்தபோது அந்த விமானத்தில் 170க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |