இலங்கை இனப்படுகொலையில் பிரித்தானிய இராணுவம் : ஆரம்பமாகும் விசாரணை

Sri Lanka United Kingdom
By Raghav Jun 12, 2025 08:17 PM GMT
Report

பிரித்தானியப் படையினர், இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து, தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருவதாகப் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் (Uma Kumaran) இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்குப் பதிலளித்துள்ள, பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், முன்னதாக வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம், காவல்துறை விசாரணைகளுக்கு உதவியிருந்தாலும், இந்த விடயத்துடன் தொடர்புடைய மேலதிக தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

அதிகரிக்கும் பதற்றம் - ஈரானின் அச்சமிகு 24 மணித்தியாலங்கள்

அதிகரிக்கும் பதற்றம் - ஈரானின் அச்சமிகு 24 மணித்தியாலங்கள்

பிரித்தானியப் படை

இலங்கையில் இடம்பெற்ற மோதலின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை தாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் கேத்தரின் வெஸ்ட் பதிலளித்துள்ளார். 

இலங்கை இனப்படுகொலையில் பிரித்தானிய இராணுவம் : ஆரம்பமாகும் விசாரணை | War Crimes Against Tamils Uk Gov Announcement

1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் செயற்பட்ட பிரித்தானியப் படையினர் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக, லண்டனில் உள்ள தீர்ப்பாயம் ஒன்றில் சாட்சியமளிக்குமாறு குறித்த ஆயுதப்படையினர் வலியுறுத்தப்பட்ட போதும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அதனைத் தடுத்து நிறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம்

இந்த சூழ்நிலையிலேயே பிரித்தானிய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் நாடாளுமன்றில் பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 

இலங்கை இனப்படுகொலையில் பிரித்தானிய இராணுவம் : ஆரம்பமாகும் விசாரணை | War Crimes Against Tamils Uk Gov Announcement

இதேவேளை, இலங்கையில் செயற்பட்ட காலப்பகுதியிலேயே எஸ்.டி.எஃப் என்ற விசேட அதிரடிப்படையை ஸ்தாபிக்கவும் பிரித்தானியாவின் எஸ்.ஏ.எஸ் சேவை நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில் எஸ்.ஏ.எஸ்ஸின் இலங்கை வருகையை அடுத்தே இந்தியாவில் இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டமையும், இலங்கையில் போர் கூர்மை பெற்றமையும் இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம்

ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம்

மீண்டும் அதிகரிக்கும் உணவு விலைகள் : எச்சரிக்கும் முக்கிய புள்ளி

மீண்டும் அதிகரிக்கும் உணவு விலைகள் : எச்சரிக்கும் முக்கிய புள்ளி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி