இறுதிப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவிற்கு மொட்டு பதிலடி
சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக சரத் பொன்சேகா தற்போது கடும் சொற்போர் தொடுத்து வருகின்றார்.
பெரும் அரசியல் சூறாவளி
இறுதிப் போரில் நடந்த சம்பவங்களையும் வெளிப்படுத்தி வருகின்றார். வெள்ளைக் கொடி விவகாரம் பற்றியும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
போரின் இறுதி தருவாயில் கோட்டாபய ராஜபக்ச, சவேந்திர சில்வாவிடம் தொலைபேசியில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் பேசியதாகவும் அதை காணொளி எடுத்த ஊடகவியலாளரை அவர்கள் கொலை செய்ய தேடியதாகவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் தற்போது நாட்டைவிட்டு தப்பியோடி அமெரிக்காவில் வாழ்வதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சரத் பொன்சேகாவின் அறிவிப்புகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
