முற்றுகிறது முறுகல் -உதய கம்மன்பிலவுக்கு பதிலடி?
fuel
podujana peramuna
udaya gamanpila
By Sumithiran
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இன்று திங்கட்கிழமை விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த ஊடக சந்திப்பு கொழும்பில் உள்ள மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகலில் நடைபெறவுள்ளது.
மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கின்ற நிலையில் எரிபொருள் விலையை உயர்த்திய அமைச்சர் கம்மன்பில உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சாகர காரியவசம் நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக அமைச்சர் கம்மன்பில நேற்றைய தினம் ஊடக சந்திப்பை நடத்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.