கனேடிய மக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பிரதேசமொன்றில் ஆபத்தான போதை மருந்துகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிசானாவெப் அஸ்கி என்ற பகுதியிலேயே மிகவும் ஆபத்தான போதை மருந்து வகைகள் புழக்கத்தில் அதிக அளவு காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிதமிஞ்சிய போதை மாத்திரை பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறான சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்தான போதை பொருட்கள்
இதேவேளை, சிலவகை போதை மருந்துடன் வேறும் சில இரசாயனங்கள் கலக்கப்படுவதனால் இவை மேலும் ஆபத்தானதாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பென்டானைல் போன்ற போதை மருந்துகளில் பல்வேறு கலப்படங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆயிரக்கணக்கான கிராம், போதை பொருட்கள் ஒன்டாரியோவில் மீட்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
