பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு (colombo) - திம்பிரிகஸ்யாய சசுமயவர்தன மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், சகல பாடசாலை மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும்.
மது பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல்
நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும். மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது.
மது பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல். இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி நடந்துகொள்ள வேண்டும்.
சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்துறை
தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும். கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது.
பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ல நாகரீக வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |