போர் நிறுத்த விவகாரத்துக்கு மத்தியில் மொஜ்தபா கமெனியிடம் இருந்து ஒரு எச்சரிக்கை
ஹோர்மூஸ் விவகாரம் தற்போது அமைதி நிலையை பெற்றுள்ள பின்னணியில் ஈரான் உச்சத்தலைவரிடம் இருந்து வெளிவந்ததான செய்தி புதிய அச்சத்தை தூண்டியுள்ளது.
இந்த அறிக்கை,ஈரானின் இராணுவ தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு செய்தியில்,
ஈரானின் கடற்படை தயார்
"எதிரிகளுக்குப் புதிய தோல்விகளின் கசப்பைச் சுவைக்கச் செய்ய ஈரானின் கடற்படை தயாராக உள்ளது" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆறு வாரங்களுக்கு முன்பு ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவெளியில் தோன்றாமலும், எந்தக் காணொளிச் செய்திகளையும் வெளியிடாமலும் இருந்த கமெனி, தனது எழுத்துப்பூர்வமான செய்தியில் ஹோர்முஸ் நீரிணையின் நிலை குறித்த சமீபத்திய குழப்பங்கள் எதையும் குறிப்பிடவில்லை.
எனினும் தனக்குச் சொந்தமான நிலப்பரப்பு, நீர்நிலைகள் மற்றும் கொடியைத் துணிச்சலுடன் பாதுகாத்ததற்காக ஈரான் இராணுவத்தை குறித்த அறிக்கை பாராட்டியுள்ளது.
இந்த ஆண்டு ஈரானின் இராணுவ தினம், இந்தப் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட, ஈரானின் முன்னாள் உச்ச தலைவரும் அவரது தந்தையுமான அயதுல்லா அலி கமெனியின் பிறந்த நாளுடன் ஒத்துப்போனது என அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |