எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
By Jaso
ஐம்பது வீத எரிபொருளை சேமித்து வைக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குமே இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பறந்தது கடிதம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இது தொடர்பில் 770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு, ராஜகிரியவில் மேற்குறிப்பிட்ட விதிகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்