கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Ontario
Canada
World
By Laksi
கனடாவிலுள்ள (Canada) மாகாணம் ஒன்றில் உண்ணிகள் காரணமாக லைம் (Lyme) என்ற நோய் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் வழமையை விடவும் இம்முறை லைம் நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த மாகாணத்தில் சுமார் 13 உண்ணி வகைகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கூடுதலான வெப்பநிலை
கோடை காலங்களில் குறிப்பாக பூச்சியம் பாகையை விடவும் கூடுதலான வெப்பநிலை நிலவும் போது இந்த வகை உண்ணிகள் பரவத் தொடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்ணிகள் கடிக்கும் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை எனவும், அவரவர் உடல் நிலையை பொறுத்து நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி