கூட்டணி விவகாரங்களை பொது இடங்களில் பேசக்கூடாது - எச்சரிக்கின்றார் ஆளும் கட்சி எம்.பி
Srilanka Freedom Party
Sri Lanka Podujana Peramuna
By Vasanth
கட்சியின் உள் விவகாரங்கள் மற்றும் கூட்டணியின் பிரச்சினைகள் பொதுவில் விவாதிக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள தற்போதைய மோதல்களுக்கு தவறான புரிதல்களே காரணம். எந்தவொரு கூட்டணியிலோ அல்லது அமைப்பிலோ பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதுபோன்ற பிரச்சினைகளை உட்கட்சிக்குள் விவாதிப்பதே சிறந்தது.
அத்தோடு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தின் பொதுவான நிலைப்பாட்டை மதிக்க வேண்டும் என்பதோடு இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.