காசாவில் ராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைக்குமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்து

United States of America Israel World Israel-Hamas War Gaza
By Beulah Dec 16, 2023 04:38 PM GMT
Report

இஸ்ரேல் - ஹமாஸ் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றே விரும்புவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இறங்கி வந்தால் போர் இப்போதே முடிவுக்கு வந்துவிடும் எனவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

ஹமாஸை ஒழிப்பதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளித்தாலும் காசாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பு 19 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி மேலும் குறிப்பிடுகையில்,

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை : டிரான் அலஸ் அறிவிப்பு

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை : டிரான் அலஸ் அறிவிப்பு

துல்லியமான தாக்குதல்

“இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் சல்லிவன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காசாவில் ராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைக்குமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்து | Washington Urges Israel To End War

அப்போது, காசாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நெதன்யாகுவிடம் சல்லிவன் வலியுறுத்தினார்.

அதற்காக, தீவிரமான தாக்குதல்களுக்குப் பதிலாக இலக்குகளை மட்டும் குறிவைத்து 'துல்லியமான' தாக்குதல் நடத்தும் உத்தியைப் பயன்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இனி வரும் நாட்களில் அந்த உத்தி நடைமுறைப்படுத்தப்படலாம். ஆனால் அது எப்போது என்று இப்போதே கூற முடியாது. ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது.

அந்த உரிமையை தொடர்ந்து மதிக்கிறோம். இருந்தாலும், பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.

இது குறித்து விவாதிப்பதற்காகத்தான் சல்லிவன் இஸ்ரேல் சென்றுள்ளார்.

அங்கு அவர் இஸ்ரேலுக்கு நிபந்தனைகள் விதிக்கப்போவதில்லை. இருந்தாலும், காஸா தாக்குதல் குறித்த கடினமான கேள்விகளை அவர் முன்வைப்பார்.” என்றார்.     

ஏலத்தில் விடப்பட்ட மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள்: இத்தனை கோடிகளா!

ஏலத்தில் விடப்பட்ட மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள்: இத்தனை கோடிகளா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026