சில மணித்தியாலய நேரங்களாக குறைக்கப்பட்ட நீர் விநியோகத் தடை
Sri Lanka
Water Cut
Water Board
By Abi
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், கொழும்பில் உள்ள பாதுக்கை , ஹோமகம, பெலவத்தை மற்றும் பன்னிப்பிட்டிய பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த 24 மணி நேர நீர் விநியோகத் தடை, 18 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், முன்னர் திட்டமிடப்பட்ட திகதிகளிலோ அல்லது பகுதிகளிலோ எந்த மாற்றமும் இருக்காது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்