துபாயில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் குறித்து விசேட அறிவிப்பு
துபாய் அரசின் அறிவுறுத்தல்களின்படி, ஈஸ்டர் வார இறுதிக்கு முன்னதாக நடைபெறவிருந்த திருப்பலிகளை இரத்து செய்துள்ளதாக துபாயில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்க ஒழுங்குமுறை அதிகாரிகளின் உத்தரவுகளின்படி, தங்கள் தேவாலயத்தில் நடைபெறும் அனைத்துத் திருப்பலிகளும் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்படுகின்றன, என துபாயில் உள்ள அசிசியின் புனித பிரான்சிஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் சமூக நலன் கருதி, பங்கு மக்கள் தேவாலயத்திற்கு வராமல் இருக்குமாறு அது கேட்டுக்கொள்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இதன்படி துபாயில் உள்ள புனித மேரி கத்தோலிக்க தேவாலயமும் இதேபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க அது தனது ஆராதனைகளை இரத்து செய்வதாகவும், அதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை ஆராதனையை நேரலையில் ஒளிபரப்பும் என்றும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்