4 மணி நேர நீர் விநியோகத் தடை - வெளியான அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (22) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
நீர் விநியோகத் தடை
அதன்படி, குருணாகல் - கண்டி பகுதிகளுக்குட்பட்ட ராஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல பழைய சேவை நீர்த்தேக்கம், மெதவல புதிய சேவை நீர்த்தேக்கம்.

மற்றும் கல்கெதர சேவை நீர்த்தேக்கம், மாவத்தகம சேவைப் பகுதி ஆகிய திட்டங்களின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மட்டுமே நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்