இன்றும் 5,000 ரூபாய் - இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
எவர் எத்தகைய விமர்சனங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புதுவருடத்தை யொட்டி சமுர்த்திஉதவி பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றும் இன்றும் அதற்கான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி கொடுப்பனவு தொடர்பில் எந்த தரப்பினரும் எந்த சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் குறித்த பிரதேசத்தில் வங்கி கிளைகளின் மூலம் மேற்படி 5000 ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.
சமுர்தி அதிகாரிகளுக்கிடையில் சில பிரச்சினைகள் இருந்தபோதும் அவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்ட அவர் மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.