யாழ். அனலைதீவு பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் இன்றையதினம்(07) துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை, அந்த காணியின் உரிமையாளர் இன்றையதினம் சுத்தம் செய்துள்ளார்.
மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த ஆயுதங்கள்
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த குறித்த கைக்குண்டும், துப்பாக்கியும் அவதானிக்கப்பட்டது. இது குறித்து ஊர்காவற்றுறை காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற ஊர்காவற்துறை காவல்துறையினர், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி