திருகோணமலையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட விவகாரம்: கிழக்கு ஆளுநர் உறுதி
திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் (Senthil Thondaman) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு ஆளுனர் செயலகத்தில் இன்றையதினம் (15.06.2024) பெறுபேறுகள் வெளிவராத மாணவிகளால் அளிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு எதிராக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவிகள் அவ்வாறு பரீட்சை எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய தீர்வு
இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்த முஸ்லிம் மாணவிகள் , தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், மாகாண கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் என பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |