பனைமரம் முறிந்து விழுந்து சிறுமியொருவர் படுகாயம்
யாழ். காரைநகரில் பனை மரம் முறிந்து விழுந்து இரண்டரை வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தற்பொழுது வட பகுதியில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே48 கிராம சேவகர் பிரிவில் வீசிய கடும் சுழல் காற்றினால் இன்று மாலை பனை மரம் முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்த நிலையில் வீட்டில் இரண்டரை வயதுச் சிறுமி படுகாயமடைந்து சங்கானை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் இருவர் வீட்டுக்கு வெளியில் நின்றதன் காரணமாக ஏனையவர்களின் உயிர் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன், வீடு பலத்த சேதமடைந்துள்ளது.
தகவலறிந்த காரைநகர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் குறித்த பனையை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.