அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 செப்டெம்பர் 9ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
எனவே, பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளில் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |