கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம்
weather
sri lanka
sea
By Shalini
நாட்டில் கடற்பிராந்தியங்களில் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
இதனை தவிர, நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும்.
இதனால் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
1ம் ஆண்டு நினைவஞ்சலி