நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை - கடும் குளிரால் உயிரிழந்த கால்நடைகள்!
Kilinochchi
Weather
By pavan
கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் மற்றும் மழை காரணமாக 40 மாடுகளும், 3 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று (9) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் உள்ள பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
மேலும் சில கால்நடைகள்

இந்த நிலையில் குறித்த பண்ணையில் உள்ள மேலும் சில கால்நடைகள் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே அந்த கால்நடைகளை காப்பாற்றும் வகையில் தீ மூட்டும் செயற்பாட்டில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி