குட்டி லண்டனாக மாறிய இலங்கை நகரம்!
குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவு பதிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில்,
“தற்போது ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு காலநிலை ஆரம்பித்துள்ளது.
மாறுபட்ட காலநிலை
இந்நிலையில் நுவரெலியாவை பார்க்கும் போதும் அவ்வாறான உணர்வு ஏற்படுகிறது.”என தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டவியல் திணைக்களம்
மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் ஏனைய பகுதிகளிலும் கடும் வெப்பமான காலநிலையும் நிலவுகிறது.
இதேவேளை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 15 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்