சட்டவிரோத திருமண நிகழ்வு! 20 பேருக்கு ஏற்பட்ட நிலை
sri lanka
people
panandurai
By Shalini
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமண நிகழ்வை நடத்திய 20 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் குறித்த 20 பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்த பின்னர், தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் தண்டனைச் சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுகாதார சட்டங்களை மீறி பாணந்துறை - பல்லிமுல்ல பகுதியில் திருமணம் நடைபெறுகிறது என்ற தகவலைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த பகுதியில் சோதனை நடத்தினர்.
இதில் திருமணத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலோர் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர், எனினும் 12 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 22 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி