திருமணம் - தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம்

Sri Lanka Tamil Movie Review
By Dharu Sep 21, 2026 12:18 AM GMT
Report

இலங்கையில் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பல்வேறு தனியார் அல்லது வர்த்தக நிகழ்வுகளில் இசையை ஒலிபரப்புவதற்கு புதிய உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின் அடிப்படையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, சிங்களம், தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை நிகழ்வுகளில் ஒலிபரப்புவதற்கு குறிப்பிட்ட உரிமக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.

சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

புதிய விதிமுறை

புதிய விதிமுறைகளின் கீழ் திருமண வரவேற்புகள், தனியார் விருந்துகள், நிறுவன நிகழ்வுகள், இரவு விருந்துகள், விருது வழங்கும் விழாக்கள், தயாரிப்பு அறிமுக நிகழ்வுகள், கண்காட்சிகள், மாநாடுகள், நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் DJ நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இசை இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

திருமணம் - தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம் | Weddings And Events New License For Playing Music

எனினும், ஆங்கிலம் அல்லது பிற வெளிநாட்டு இசை மட்டுமே பயன்படுத்தப்படும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு நடைபெறுவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர், ஹோட்டல் அல்லது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வு முடிந்த பின்னர், அங்கு ஒலிபரப்பப்பட்ட இசைப் படைப்புகளை அடையாளம் காண்பதற்கு போதுமான தரத்தில் ஒலிப்பதிவு ஒன்றையும் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் நிகழ்வின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உரிமக் கட்டணம் மாறுபடுகிறது.

பொதுவான DJ நிகழ்வுகளுக்கு: 100 பேருக்கும் குறைவானோர் - ரூ.20,000,  100 முதல் 300 பேர் வரை -  ரூ.30,000,   300 பேருக்கும் அதிகமானோர் - ரூ.40,000,  நேரடி இசை நிகழ்வுகளுக்கு முறையே ரூ.25,000, ரூ.35,000 மற்றும் ரூ.50,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சதிப்பின்னணி! அடுத்தக்கட்ட விசாரணையில் ஆவணமாகம போகும் சஜித்தின் வாக்குமூலம்

ஈஸ்டர் தாக்குதல் சதிப்பின்னணி! அடுத்தக்கட்ட விசாரணையில் ஆவணமாகம போகும் சஜித்தின் வாக்குமூலம்

கட்டண அறவீடு

தனியார் அல்லது நிறுவன DJ நிகழ்வுகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையும், நேரடி அல்லது கலப்பு இசை நிகழ்வுகளுக்கு நிகழ்வின் அளவைப் பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.1,25,000 வரையும் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் - தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம் | Weddings And Events New License For Playing Music

நிகழ்வுகளுக்கு மட்டுமன்றி, பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வர்த்தக காட்சியகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட வர்த்தக வளாகங்களுக்கு வருடாந்த உரிமம் வழங்கப்படவுள்ளது.

குறித்த வளாகத்தின் பரப்பளவு மற்றும் அது அமைந்துள்ள உள்ளூராட்சி அதிகார சபை, ஆகியவற்றின் அடிப்படையில் வருடாந்த கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய நடைமுறை அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ACPOSL தலைவர் நிலார் என். காசிம் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய உரிம விதிமுறைகளுக்கு ஹோட்டல் துறையிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இலங்கை ஹோட்டல் சங்கத்தின் (THASL) தலைவர் அசோக ஹெட்டிகொட, இந்த நடைமுறை ஹோட்டல் துறைக்கு அதிகப்படியான மற்றும் நியாயமற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த கூடுதல் செலவு காரணமாக ஹோட்டல்களில் சிங்கள இசையை ஒலிபரப்புவதைத் தவிர்க்கும் நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்