இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் - தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம்
இலங்கையில் அண்மைக்காலமாக வயதுக்கேற்றதை விடவும் குண்டாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இவ்வாறு எடை அதிகப்பது பிற்காலத்தில் தொற்றா நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆண்களில் அதிக எடை
"2015 ஆம் ஆண்டில், ஆண்களில் 22.5% பேர் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக இருந்தனர். 2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 30% ஆக அதிகரித்துள்ளது.
பெண்கள் அதிக எடை
அதே நேரத்தில், 2015 இல், 34% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனான பிரிவில் இருந்தனர். 2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 48% ஆக அதிகரித்துள்ளது.
அதிகமாக உட்கொண்டால் அதிகப்படியான அளவு எண்ணெயாக நம் உடலில் தேங்குகிறது.எடை அதிகரிப்பை பாதிக்கிறது.இது பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது என குறிப்பிட்டார்.
