1983 இல் திட்டமிட்டு நடந்த வெலிக்கடைச் சிறைக்கலவரம்!
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலை இடம்பெற்ற காலத்திலே ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் அங்கமாக வெலிக்கடை சிறைப்படுகொலையை அரச இயந்திரத்தின் அனுசரணையோடு தென்னிலங்கை சிங்களவர்கள் மேற்கொண்டதாக சமூக செயற்பாட்டாளர் விவேகானந்தனூர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் அண்மைக் காலங்களிலே குறிப்பாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அந்த சிறைக் கலவரத்தை நாங்கள் அவ்வாறு பார்க்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆட்சி அதிகாரத்தின் பின்னர் ஒரு ஊழலற்ற போதைப்பொருளை ஒழிக்கின்ற செயற்பாட்டிலே தற்போதைய அரசாங்கம் கடும்போக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்ட அவர் ஒட்டுமொத்த இலங்கையிலும் அதனை விரும்பாத கடந்தகால ஆட்சியாளர்கள் அல்லது போதைப்பொருள் மாபியாக்களின் திட்டமிட்ட செயற்பாடாகவே நீர்கொழும்பு சிறைக்கலவரம் அமைந்தது எனவும் கூறியுள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |