வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்
வெலிக்கடை சிறைச்சாலை விடுதியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட கைதி ஒருவர், விடுதியில் இருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற கைதி நாத்தாண்டிய - மெதகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சிறை விடுதியின் மேலாளராகப் பணியாற்றும் சிறைக் காவலரால், அந்த விடுதியைச் சுத்தம் செய்வதற்காக மூன்று கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்
இந்நிலையில், கைதிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறைக் காவலர் மதிய உணவு அருந்துவதற்காகத் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபரான கைதி, விடுதிக்கு முன்னால் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடிக்கொண்டு, லெஸ்லி ரணகல மாவத்தை வாசல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |