190 பில்லியன் ரூபாவை வெளிநாட்டிற்கு கடத்திய தொழிலதிபர் விளக்கமறியலில்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jun 26, 2026 12:28 AM GMT
Report

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் பெருந்தொகைப் பணத்தை நாட்டிற்கு வெளியே அனுப்பிய தொழிலதிபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காட்டிக்கொண்டு சுமார் 190 பில்லியன் ரூபாவை நாட்டிற்கு வெளியே கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெஃப்ரி முகமது, நீர்கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

காவல்துறை நிதிமோசடி விசாரணை புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தேக நபர், நேற்று (25-06-2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தாய்வான் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவின் அச்சுறுத்தல்!

தாய்வான் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவின் அச்சுறுத்தல்!

அரசாங்கத் தரப்பு 

அதன்போது அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா, சந்தேக நபர் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 190 பில்லியன் ரூபாயைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

190 பில்லியன் ரூபாவை வெளிநாட்டிற்கு கடத்திய தொழிலதிபர் விளக்கமறியலில்! | Wellawatte Businessman Held Over Drug Money

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் தந்தி வழிப் பணப் பரிமாற்ற முறையில் அமெரிக்க டொலர்களில் அந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சந்தேக நபர், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தை அவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ள போதிலும் அவருக்கு வரவு வைக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கட்டத்திலும் நாட்டிற்குள் எதுவிதமான பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: அநுரவின் எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி

எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: அநுரவின் எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி

வெளிநாடுகளுக்குப் பணம்

இந்தப் பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது அல்லது எந்த நோக்கத்திற்காக சந்தேக நபர் வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தையும் தனது பெயரிலான வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

190 பில்லியன் ரூபாவை வெளிநாட்டிற்கு கடத்திய தொழிலதிபர் விளக்கமறியலில்! | Wellawatte Businessman Held Over Drug Money

சந்தேக நபருக்காக முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரரை எந்தவொரு நிபந்தனை அடிப்படையிலேனும் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட பிரதான நீதவான் போதரகம, பிணை மனுவை நிராகரித்துச் சந்தேக நபரை ஜூலை ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்...! வெடித்த சர்ச்சை

பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்...! வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024