இலங்கையின் கடன் மறுசீரமைப்பு - ஐ.எம்.எப் க்கு பறந்த கடிதம்
Sri Lanka
India
By Kiruththikan
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு வலுவான ஆதரவை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்தியா சர்வதேச நாணயத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடன் திட்டத்திற்கான எங்களின் வலுவான ஆதரவை நாங்கள் உறுதி செய்கின்றோம் என இந்திய நிதியமைச்சின் அதிகாரி ராஜாட் குமார் மிஸ்ரா தனது கடிதத்தில் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்படும் நிதி - அல்லது கடன் நிவாரணம் சர்வதேச நாணயநிதியத்தின் கீழ் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இசைவாக இருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி