கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
sumanthiran
tamil national alliance
parliament
gamanpila
By Jaso
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பரிசீலிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இதன்போது, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி