முல்லைத்தீவில் மையம் கொண்டுள்ள காற்றுச்சுழற்சி!
இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வானிலை ஆய்வு
தற்போது நாட்டில் பெய்துவரும் மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது.
மிதமான காற்றும்
இன்றையதினம் (18) காலை 7 மணியளவில் இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று மையம் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இன்று (18) தொடக்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் எனவும் மழையுடன் சேர்த்து மிதமான காற்றும் வீசக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.