காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்களா? சிறிதரன் சபையில் ஆவேசம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்கவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதன் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சிறிலங்கா அரச படையினரால் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களுமே இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை சித்திரவதைச் சம்பவம் குறித்தும் ஆவேசமாக கருத்துக்ளை பகிர்ந்து கொண்டார்.
அவர் ஆற்றிய உரை காணொளி வடிவில்,