பாம்புக் கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்.....
வாஸ்து சாஸ்திரப்படி, செடிகளானது வீட்டை அலங்கரிக்க பெரிதும் உதவுவதுடன் நமக்கு நல்ல சுத்தமான காற்றினை வழங்குவதுடன், வீட்டில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன.
வீட்டை அலங்கரிக்கும் பலவிதமான செடிகள் உள்ள அதேவேளை அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வளர்க்கக்கூடிய சில செடிகளும் உள்ளன. ஆனால் அந்த அதிர்ஷ்ட செடிகளை வீட்டில் சரியான இடத்தில், திசையில் வைத்தால் தான் முழு பலனைப் பெற முடியும்.
அதில் பலரும் அறிந்த ஒன்று தான் மணி பிளாண்ட். அதற்கு அடுத்தபடியாக வீட்டை அலங்கரிக்கவும், அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும் பாம்புக் கற்றாழைச் செடி உதவுகிறது.
குளியலறையில் வளர்த்தல்
வாஸ்து சாஸ்திரப்படி பாம்புக் கற்றாழையை வீட்டின் எந்த இடத்தில், திசையில் வைக்க வேண்டும் என்பதுடன் வீட்டில் வளர்ப்பதால் பெறும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்டத்திற்காக பாம்புக் கற்றாழையை வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும் வளர்க்கலாம். ஆனால் சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அந்தவகையில், குளியலறை மற்றும் படுக்கை அறையில் வளர்க்க ஏற்ற செடியாக இது கருதப்படுகிறது. மேலும் இந்தச் செடியை வீட்டின் ஹோலின் ஒரு மூலையிலும் வைத்து வளர்க்கலாம்.
வீட்டினுள் பாம்புக் கற்றாழையை வளர்ப்பதாக இருந்தால், வீட்டிற்கு வருவோரின் கண்களில் படும்படி இருக்க வேண்டும். எப்போதும் இந்த செடியை மற்றவர்களின் பார்வையில் படாதவாறு வைக்கக்கூடாது. இப்படி மற்றவர்களின் பார்வையில் படும்படி வைக்கும் போது கண் திருஷ்டி நீங்கி, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகம் சுற்றும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாம்புக் கற்றாழையை வீட்டின் கிழக்கு, தெற்கு மற்றம் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இந்த திசையில் இச்செடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது
பாம்புக் கற்றாழையை வீட்டில் வைக்கும் போது பின்வரும் விடயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
அதன்படி, வீட்டில் பாம்புக் கற்றாழையை வைப்பதாக இருந்தால், அவற்றை எப்போதும் மேசையின் மீதோ அல்லது வேறு ஏதாவது மேற்பரப்பிலோ வைக்கக்கூடாது. எப்போதும் தரையில் தான் வைக்க வேண்டும்.
பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வைத்தால், அந்த செடியைச் சுற்றி வேறு எந்த செடியையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தான் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
வாஸ்துப்படி, பாம்புக் கற்றாழையை வீட்டில் வைத்து வளர்த்தால், அது அந்த வீட்டில் உள்ளோருக்கு தொழிலில் நல்ல இலாபத்தையும், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் கொண்டு வரும் என நம்பப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

