இஸ்ரேல் - ஈரான் போரில் மறைக்கப்பட்ட உண்மை! அதிரடியான ஒரு ஆய்வு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது.
இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்ளும் இந்த மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைத்தன்மையை மிகுந்தளவில் பாதித்துள்ளது.
ஆனால், இந்த போரில் யார் முன்னிலையில் உள்ளனர் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் எதுவும் இல்லை. பல்வேறு சர்வதேச ஊடகங்கள், இரு தரப்பும் தங்களுக்கான வெற்றிகளை மட்டும் வலியுறுத்தும் நிலையில், நிலைமையை முழுமையாக புரிந்து கொள்வது சற்று சிக்கலாகியுள்ளது.
ஒரு பக்கம், இஸ்ரேல் தனது மேம்பட்ட இராணுவ திறன்கள், துல்லியமான தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பல முக்கிய இலக்குகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கிறது. மறுபக்கம், ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் எதிரியை அழுத்தத்தில் வைத்துள்ளதாக கூறுகிறது.
எனவே, இந்த போரின் உண்மையான நிலையை புரிந்துகொள்ள, இரு நாடுகளும் சந்தித்துள்ள சேதங்கள், இராணுவ இழப்புகளின் ஒப்பீட்டை தெளிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |