கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு ஏன் பாதுகாப்பு
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்காக நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டியவர் என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு கொடுத்தது. ஆனால் இந்த உத்தரவை மீறி தற்போது ஐரோப்பிய நாடுகள் நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளன.
இதற்கு எதிராக ஐ.நா செயற்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார். பலஸ்தீனத்தில் மனித உரிமைகள் நிலைமையைப் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு நிருபர் பிரான்செஸ்கா அல்பானீஸ்தான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட இவர், பலஸ்தீனத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை ஆய்வு செய்து தொடர்ந்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.
மனித உரிமை மீறல்
இஸ்ரேல் நடத்தும் கொடுர தாக்குதல்களில் பொதுமக்களும், குழந்தைகளும்தான் செத்து வீழ்கிறார்கள் என்று இவர் குற்றம்சாட்டி வருகிறார்.
அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை, வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துவதில் இவர் முக்கியமான நபர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) அமெரிக்காவுக்கு நெதன்யாகு சென்றிருந்தார்.
அவர் பயணித்த விமானம் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் நாடுகளை கடந்து பயணித்திருக்கிறது. இந்த நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அப்படியெனில், இந்த நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், அந்த குற்றவாளிக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்க கூடாது.
குறிப்பாக நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நாடுகள் அதை செய்யவே கூடாது.
ஆனால், இந்த மூன்று நாடுகளும், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நெதன்யாகுவை தங்கள் வான் பரப்பில் பயணிக்க அனுமதித்திருக்கின்றன. இதைத்தான் அல்பானீஸ் கேள்வியாக எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
