அரசாங்கமும், அமைச்சரவையும் எதற்கு? இராகிருஷ்ணன் வெளியிட்டுள்ள தகவல்
government
cabinet
Rathakirushnan
By Vanan
பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை - இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கமும், அமைச்சரவையும் எதற்கு - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராகிருஷ்ணன் ( V.Rathakirushnan)கேள்வி எழுப்பியுள்ளார்.
நுவரெலியா, தலவாக்கலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது, முன்னரெல்லாம் வரவு - செலவுத் திட்டம் வரும்போது தான் பொருட்களின் விலை மறுசீரமைக்கப்படும். ஆனால் இன்று நாளாந்தம் அதிகரிப்பு இடம்பெறுகின்றது.
இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களுமே விலையை நிர்ணயிக்கின்றனர். அப்படியானால் அரசாங்கம், அமைச்சரவை எதற்கு என இராகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.