பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா? வெளியானது அறிவிப்பு
bus
dilum amunugama
fares
By Sumithiran
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து பேருந்து கட்டணங்கள் எக்காரணத்துக்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலார்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் பயணச் சீட்டு விலைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
விரைவில் இதுகுறித்து அரச தரப்புடன் பேச்சு நடத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்