பட்ஜெட்டுடன் எரிபொருள் விலை அதிகரிக்குமா? வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நிதி அமைச்சர் தீர்மானம் எடுப்பார் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (09) காலை எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
“அண்மைய ஆண்டுகளில் மண்ணெண்ணெய் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளது.இதற்கு முதல் காரணம், ஒரு லீட்டர் டீசல் ரூ.111க்கு விற்பனை செய்வதாகும். மறுபுறம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் ரூ.77க்கு விற்கிறது. இதனால் தொழிற்சாலை இயந்திர படகுகள் மட்டுமன்றி பேருந்துகளும் தற்போது மண்ணெண்ணெயில் இயங்கி வருகின்றன.
எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு இடையே உள்ள மிகப்பெரிய விலை இடைவெளியால், எரிவாயு அடுப்பில் சமைப்பதை தவிர்த்து, மண்ணெண்ணெய் அடுப்பையே பயன்படுத்த மக்கள் ஆசைப்படுகின்றனர். இந்த நாட்களில் விவசாய சமுகம் அல்லது மீனவ சமுகம் இல்லாத பகுதிகளில் மண்ணெண்ணெய் விநியோகத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.
ஊடகவியலாளர்: எண்ணெய் விலையில் பிரச்சினை உள்ளதா?
“மரத்தில் இருந்து விழுந்தவன் பெரும் துயரத்தில் இருக்கிறான் என்பதற்காக அவனைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்று நினைத்து மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ள நிலையில் நாம் எரிபொருள் விலையை உயர்த்தவில்லை. ஆனால் இந்த பட்ஜெட் உடன் எரிபொருள் விலையை நிதி அமைச்சரே முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்..