அமெரிக்க அரசு சாரா நிறுவனங்களுக்கு விமல் விடுத்துள்ள சவால்
அமெரிக்காவில்(us) உள்ள USAID மற்றும் NED நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை அரசியல்வாதிகளும் அரசு சாரா நிறுவனங்களும் எவ்வாறு செலவிட்டன என்பதை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச(wimal weerawansa) நேற்று (பெப்ரவரி 10) தெரிவித்தார்.
இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் ஆட்சி மாற்றம் என்று அழைக்கப்படுவதற்கு 240 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாகவும், திருநங்கைகளை ஊக்குவிப்பதற்கும், பௌத்த எதிர்ப்பு சித்தாந்தத்தை உருவாக்குவதற்கும், ஊடகங்கள் மற்றும் யூடியூப் சனல்களைப் பராமரிப்பதற்கும் செலவிட்டதாகவும் கூறினார்.
இலங்கை பத்திரிகையாளர்களுக்கு எலோன் மஸ்க் அளித்த நிதியுதவி
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(donald trump) நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான எலோன் மஸ்க்(elon musk), இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பாலின-நடுநிலை சொல் அகராதியை கற்பிக்க USAID நிறுவனம் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமாராக ரூ. 240 கோடி) செலவிட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
USAID வளர்ச்சி என்ற போர்வையில் தோன்றுவதாகக் கூறிய அவர், அது நீதித்துறைக்கு நிதியுதவி அளித்துள்ளதாகவும், இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த உயர் பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியுதவியை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் ஒரு நிறுவனம்
அதேபோல், NED என்பது ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் ஒரு நிறுவனம் என்றும், ஒரு நாட்டின் ஆட்சி அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முரணாக இருந்தால், அரசாங்கத்தை கவிழ்க்க நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் வீரவன்ச தெரிவித்தார்.
இருவருக்கு ஏற்பட்ட வருத்தம்
நாட்டிலுள்ள இரண்டு அரசு சாரா நிறுவனங்களின் தலைவர்களான பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஜெஹான் பெரேரா ஆகியோர் USAID நிதியை நிறுத்தி வைத்ததால் வருத்தமடைந்ததாகவும், இது அரசு சாரா நிறுவனங்களின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
திருநங்கைகளை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு ஜே.வி.பி மட்டுமே பங்களித்துள்ளதாகக் கூறிய வீரவன்ச, ஜே.வி.பியின் சோசலிச இளைஞர் சங்கம், எல்.ஜி.பி.டி.கியூ சமூகத்தினருக்காக ஃப்ரீடம் பிரைட் மார்ச் - 2023 என்ற திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் ஹரிணி (harini amarasuriya)அமரசூரிய 2015 வரை பாக்கியசோதி சரவணமுத்து நடத்தும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, USAID நிதியுதவி அளித்த ஒரு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)